லக்கினாதிபதி எந்தெந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?
லக்கினத்தில் லக்கினாதிபதி :
லக்கினத்தில் லக்கினாதிபதி இருந்தால் ஜாதகர் புகழ் நிறைந்தவராக இருப்பார். தன்னுடைய சொந்த முயற்சியால், சொந்த காலில் பல்வேறு முன்னேற்றங்களை அடைவார். சுய முயற்சியால் வெற்றி அடையக்கூடியவராக இருப்பார்.
2ல் லக்கினாதிபதி :
லக்கினத்திற்கு 2ம் வீட்டில் லக்கினாதிபதி ஜாதகத்தில் இடம்பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு பொன், பொருள், பணம் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் பாசம், ஆதரவு ஜாதகருக்கு கிடைக்கும்.
3ல் லக்கினாதிபதி :
லக்கினத்தில் 3ம் இடத்தில் லக்கினாதிபதி இருந்தால் ஜாதகருக்கு, ஜாதகரின் இளைய சகோதரன் மூலம் ஜாதகருக்கு உதவியாக இருப்பான்
4ல் லக்கினாதிபதி :
லக்கினத்திற்கு 4ம் இடத்தில் லக்கினாதிபதி இருப்பின் அந்த ஜாதகரின் தாய் மிகுந்த அன்புடன் இருப்பாள், வீடு, வாசல், வாகனம் என சுகங்கள் ஜாதகருக்கு தேடி வரும்.
5ல் லக்கினாதிபதி :
லக்கினத்திற்கு 5ம் இடத்தில் லக்கினாதிபதி இருந்தால் அந்த ஜாதகர் அவரின் குழந்தைகள் மீது மிகவும் அன்பு வைத்திருப்பார். ஜாதகரை பலர் காதலிக்கும் வசீகரம், சூழல் இருக்கும்.
6ல் லக்கினாதிபதி :
லக்கினாதிபதி லக்கினத்திற்கு 6ம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகருக்கு எதிரிகளால் பல்வேறு தொல்லைகள், பிரச்னைகள் ஏற்படும். பகைமை ஜாதகரை தேடி வரக்கூடும்.
7ம் இடத்தில் லக்கினாதிபதி :
லக்கினாதிபதி லக்கினத்திற்கு 7ம் இடத்தில் இருப்பின் அந்த ஜாதகருக்கு வரக்கூடிய துணை மீது (கணவன் / மனைவி) ஜாதகர் அன்பாக இருப்பார்.
8ல் லக்கினாதிபதி :
லக்கினத்திற்கு 8ம் இடத்தில் லக்கின அதிபதி இருப்பின் அந்த ஜாதகருக்கு பல்வேறு அவமானங்கள் தேடி வரும். ஜாதகருக்கு பல வகையில் அச்சுறுத்தலும், மிரட்டலும் வரக்கூடும்.
9ம் இடத்தில் லக்கினாதிபதி
லக்கினத்திற்கு 9ம் வீட்டில் லக்கினாதிபதி இருப்பின் அந்த ஜாதகரின் தந்தை ஜாதகர் மீது அதிக அன்பு வைத்திருப்பார்.
10ல் லக்கினாதிபதி
லக்கினத்தில் 10ம் இடத்தில் லக்கினாதிபதி இருந்தால் அந்த ஜாதகருக்கு கெளரவமும், பெயர், புகழ் தேடி வரக்கூடும்.
11ல் லக்கினாதிபதி
லக்கினத்திற்கு 11ல் லக்கினாதிபதி இருந்தால் அந்த ஜாதகரை சுற்றி பலரும் இருப்பர். அவருடன் நட்பு வைத்துக்கொள்ளவும் பலரால் விரும்பப்படுபவராக இருப்பார்கள்.
12ல் லக்கினாதிபதி12ல் லக்கினாதிபதி இருந்தால் அந்த ஜாதகருக்கு வெளிநாடு தொடர்புகள், வெளிநாடு சென்று வரும் யோகம் தேடி வரக்கூடும்.
Comments